வெறிநாய் கடித்து சிறுமி உயிரிழப்பு; தடுப்பூசி போட்டும் பயனில்லை; ஒரே மாதத்தில் 3வது சம்பவம்

10

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் வெறிநாய் கடித்த 7வயது சிறுமி, ரேபிஸ் தடுப்பூசி போட்டு கொண்ட பிறகும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில், ஏழு வயது சிறுமியை கடந்த ஏப்ரல் 8ம் தேதி தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தபோது, ​​ஒரு தெருநாய் கடித்தது. உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையத்திற்கும், பின்னர் தாலுகா மருத்துவமனைக்கும் குழந்தையை பெற்றோர் அழைத்துச் சென்றனர். காயம் சுத்தம் செய்யப்பட்டு, குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டது.


ரேபிஸ் தடுப்பூசியின் மூன்று டோஸ்களையும் பெற்றிருந்தும், சிறுமிக்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். கேரளாவில் ஒரு மாதத்திற்குள் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட மூன்றாவது குழந்தை உயிரிழந்துள்ளது. முன்னதாக, பத்தனம்திட்டாவின் 13 வயது பாக்யலக்ஷ்மி மற்றும் மலப்புரத்தின் தேனிப்பாலத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் இந்த தொற்றுக்கு ஆளாகினர்.


கடந்த 2021ம் ஆண்டு முதல் கேரளாவில் தடுப்பூசி பெற்ற போதிலும் 22 பேர் ரேபிஸ் நோயால் இறந்துள்ளனர் என மாநில சுகாதாரத் துறை தரவுகள் தகவல் தெரிவிக்கின்றன.

Advertisement