மொபட்டில் சென்ற தம்பதி தரை பாலத்தில் மோதி பலி

மேட்டூர்: மேட்டூர் அருகே தரைப்பால தடுப்புச்சுவரில் மொபட் மோதியதில், கணவன் - மனைவி பலியாகினர்.

சேலம் மாவட்டம், கொளத்துார், சாம்பள்ளி ஊராட்சி மாசிலாபாளையத்தை சேர்ந்த பந்தல் தொழிலாளி வசந்தகுமார், 32; இவரது மனைவி ஜமுனா, 32; இவர்களின் மகன்கள் சஜித், 12, அஸ்விந்த், 9; கொளத்துாரை அடுத்த மேல்மூலப்பாறையூரில், ஜமுனாவின் பெற்றோர் வசிக்கின்றனர்.

மாமனார் வீட்டுக்கு மனைவியுடன் ஜூபிடர், மொபட்டில், ெஹல்மட் அணியாமல் வசந்தகுமார், நேற்று மாலை, 4:20 மணிக்கு புறப்பட்டார். மூலப்பாறையூர் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த மொபட், தரைப்பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதியதில், இருவரும் பலியாகினர். இதுகுறித்து, கொளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement