ஏ.பி.சி., சீசன் - 2 கிரிக்கெட் போட்டி பதிவு செய்ய அழைப்பு

ஆவடி: ஆவடி போலீஸ் கமிஷனரகம் சார்பில், 'ஏ.பி.சி., கப் சீசன் - 2' கிரிக்கெட் போட்டி, வரும் 10ம் தேதி துவங்கி 18ம் தேதி வரை நடக்கிறது.

இளைஞர் மத்தியில் போதைப்பொருள் தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இப்போட்டி நடத்தப்படுகிறது.

இதற்கான அறிமுக நிகழ்ச்சி, ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது. இதில், கிரிக்கெட் போட்டிக்கான போஸ்டரை கமிஷனர் சங்கர் அறிமுகப்படுத்தினார்.

இதில், இளைஞர்கள், பொதுமக்கள் பங்கேற்கும் 64 அணிகளும், போலீசார், அரசு ஊழியர்கள் பங்கேற்கும் 16 அணிகளும் பங்கு பெற உள்ளன.

அனுமதி இலவசம்; உங்கள் அணியை பதிவு செய்ய, 98940 40459 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement