கிருஷ்ணர் நாமத்தை தொடர்ந்து கூறினால் மனபாரம் குறையும்

அன்னுார்; அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவில், வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு 'இஸ்கான்' அமைப்பு சார்பில் பகவத் கீதை சொற்பொழிவு நடந்தது. ஒருங்கிணைப்பாளர் சரவணன் வரவேற்றார்.

இஸ்கான் தலைமையகத்தின் ஆசிரியர் சங்கர் சன கவுர தாஸ் பிரபு பேசுகையில், ''கர்மயோகத்தை விட உயர்ந்தது ஞான யோகம். ஞான யோகத்தை விட உயர்ந்தது பக்தி யோகம். பக்தியோகத்தால் மட்டுமே இறைவனை அடைய முடியும். யோகா என்றால் இணைத்தல் என்று பொருள். உடலையும், மனதையும், இறைவனுடன் இணைப்பதே யோகா. வெறும் ஆசனம் செய்வது மட்டும் யோகா அல்ல.

எந்த நேரமும் ஹரே கிருஷ்ணா நாமத்தை கூறலாம். தொடர்ந்து கிருஷ்ணர் நாமத்தை கூறுவதால், மனபாரம் குறையும். மனம் லேசாகும். பக்குவமடையும்,'' என்றார். இதையடுத்து பகவத் கீதை பஜனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement