பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிட ஆயத்தம்
திருப்பூர்; மார்ச், 3 முதல், 25ம் தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்தது; மாவட்டத்தில், 94 மையங்களில், 25 ஆயிரத்து, 348 மாணவர்கள் தேர்வெழுதினர். தேர்வுகள் முடிவடைந்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல், 4 ம் தேதி துவங்கியது.
திருப்பூர் கல்வி மாவட்டத்தில் கூலிபாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம் கல்வி மாவட்டத்தில் பொன்னு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடந்தது. மொழித்தாள் தேர்வுகளை தொடர்ந்து, முக்கிய பாடங்களுக்கான விடைத்தாள்கள் திருத்தப்பட்டது; இப்பணி, ஏப்., 17ம் தேதி நிறைவு பெற்றது.
மாணவ, மாணவியரின் மதிப்பெண்களை பதிவேற்றும் பணி இரு வாரங்கள் சுறுசுறுப்பாக நடந்தது. கடந்த, 25ம் தேதியுடன் மாவட்ட அளவில் பொதுத்தேர்வு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, விபரங்கள் தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே, 9ம் தேதி வெளியாக உள்ளது. கலெக்டர் கிறிஸ்துராஜ், முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் ஆகியோர், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தேர்வு முடிவுகளை மே, 9ம் தேதி, காலை, 10:00 மணிக்கு வெளியிட உள்ளனர்.
மேலும்
-
ஜம்மு காஷ்மீரில் ஜெயில் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி; பாதுகாப்பு அதிகரிப்பு
-
வாரத் துவக்கத்தில் தங்கம் விலை சற்று உயர்வு; ஒரு சவரன் ரூ.70,200!
-
வெறிநாய் கடித்து சிறுமி உயிரிழப்பு; தடுப்பூசி போட்டும் பயனில்லை; ஒரே மாதத்தில் 3வது சம்பவம்
-
தே.ஜ., கூட்டணியிலேயே நீடிப்பேன்; மீண்டும் மீண்டும் சொல்கிறார் நிதீஷ் குமார்
-
அக்னி நட்சத்திரம் முதல் நாளில் அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் திருவிழாவில் நடனமாடுவதில் தகராறு; கத்தியால் குத்தி சிறுவன் கொலை