கச்சைகட்டியில் குடிநீர் கஷ்டம்

வாடிப்பட்டி :வாடிப்பட்டி ஒன்றியம் கச்சைகட்டி தெற்கு தெருவில் குடிநீர் வசதியின்றி தவிப்பதுடன், கிடைக்கும் நீரையும் பிடிக்க சிரமப்படுகின்றனர்.
இக்கிராமத்தின் சில தெருக்களில் குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் குடிநீர் தேவைக்கு இப்பகுதியினர் கஷ்டப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர்.
தெற்குதெரு சுமதி, முனியம்மா கூறுகையில், ''மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.
வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் குறைந்த நேரமே தண்ணீர் வருகிறது. சில பகுதிகளில் தட்டுப்பாடும் தொடர்கிறது.
மேடான பகுதிகளில் தண்ணீர் ஏறுவதில்லை. இதனால் ஒரு குடம் நிரம்ப அதிக நேரமாகிறது. மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுகிறது.
தெற்கு தெருவில் பழைய குழாய் இணைப்பு கீழே இருப்பதால் குழியில் தேங்கும் நீரை சிறு பாத்திரத்தில் சேகரித்து குடங்களை நிரப்பும் சுகாரமற்ற நிலை தொடர்கிறது. குடிநீர் வரும் வகையில் புதிய குழாய் அமைக்க வேண்டும்'' என்றனர்.
மேலும்
-
ஜம்மு காஷ்மீரில் ஜெயில் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி; பாதுகாப்பு அதிகரிப்பு
-
வாரத் துவக்கத்தில் தங்கம் விலை சற்று உயர்வு; ஒரு சவரன் ரூ.70,200!
-
வெறிநாய் கடித்து சிறுமி உயிரிழப்பு; தடுப்பூசி போட்டும் பயனில்லை; ஒரே மாதத்தில் 3வது சம்பவம்
-
தே.ஜ., கூட்டணியிலேயே நீடிப்பேன்; மீண்டும் மீண்டும் சொல்கிறார் நிதீஷ் குமார்
-
அக்னி நட்சத்திரம் முதல் நாளில் அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் திருவிழாவில் நடனமாடுவதில் தகராறு; கத்தியால் குத்தி சிறுவன் கொலை