சாக்கடைக்காக தோண்டிய நெடுஞ்சாலை புழுதியில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதி

விழுப்புரம் : விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் பாதாள சாக்கடை பள்ளத்தை மூடி சாலை போடாததால் புழுதியில் சிக்கி வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர்.
விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் விழுப்புரம், மகராஜபுரம் பகுதியில் சில மாதங்களுக்கு முன் பாதாள சாக்கடைக்கு பைப் - லைன்களை மாற்றுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டது.
இந்த பணிகள் முடிவடைந்து, பைப் லைனுக்காக தோண்டிய பள்ளம் மூடப்பட்டது.
பணி நடந்த இடத்தில் தார்சாலை போடாததால் கனரக வாகனங்கள், பஸ்கள் செல்லும் போது மண் புழுதி பறக்கிறது.
இந்த வாகனங்களை பின் தொடர்ந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி சிரமப்படுவதோடு, விபத்திலும் சிக்குகின்றனர்.
வாகன ஓட்டிகளின் நிலையை கருத்தில் கொண்டும், போக்குவரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த சாலையை தார் சாலையாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜம்மு காஷ்மீரில் ஜெயில் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி; பாதுகாப்பு அதிகரிப்பு
-
வாரத் துவக்கத்தில் தங்கம் விலை சற்று உயர்வு; ஒரு சவரன் ரூ.70,200!
-
வெறிநாய் கடித்து சிறுமி உயிரிழப்பு; தடுப்பூசி போட்டும் பயனில்லை; ஒரே மாதத்தில் 3வது சம்பவம்
-
தே.ஜ., கூட்டணியிலேயே நீடிப்பேன்; மீண்டும் மீண்டும் சொல்கிறார் நிதீஷ் குமார்
-
அக்னி நட்சத்திரம் முதல் நாளில் அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் திருவிழாவில் நடனமாடுவதில் தகராறு; கத்தியால் குத்தி சிறுவன் கொலை
Advertisement
Advertisement