பாதியில் நிறுத்தப்பட்ட கரடிக்கல் ஜல்லிக்கட்டு

திருமங்கலம் : திருமங்கலம் கரடிக்கல்லில் சுந்தரராஜ பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் குளறுபடிகள் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.
கரடிக்கல்லில் நடந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்க 1070 காளைகள், 450 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்து இருந்தனர். காலை 8:00 மணிக்கு போட்டி தொடங்கியது. ஆர்.டி.ஓ., சிவஜோதி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மருத்துவக் குழு பரிசோதனை மெதுவாக நடந்ததால் மாடுகளை அவிழ்த்து விடுவதில் தாமதம் ஏற்பட்டது. காளைகளுக்கு வழங்கிய டோக்கன் வரிசைப்படியே காளைகளை அவிழ்த்து விட வேண்டும் என சிலர் தெரிவித்ததால் மாடுகள் வாடி வாசலுக்கு வந்து சேர்வதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன.
பதிவு செய்யப்படாத, பரிசோதனை செய்யப்படாத காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. 446 காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில் ஆர்.டி.ஓ., சிவஜோதி மதியம் 3:00 மணிக்கு போட்டியை நிறுத்த உத்தரவிட்டார். அதிருப்தி அடைந்த மாடுகளின் உரிமையாளர்கள் சிலர் தங்கள் காளைகளை பொது வெளியில் அவிழ்த்து விட்டனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
போலீசார் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி, மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். காலை முதல் நடந்த நிகழ்ச்சியில் மாடு உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 52 பேர் காயமடைந்தனர். இதில் காயமடைந்த ஆறு பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
நாகமலை புதுக்கோட்டை எஸ்.எஸ்.ஐ., ஆனந்தன் மீது மாடு முட்டியதில் காயம் அடைந்தார். அவரையும் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும்
-
ஜம்மு காஷ்மீரில் ஜெயில் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி; பாதுகாப்பு அதிகரிப்பு
-
வாரத் துவக்கத்தில் தங்கம் விலை சற்று உயர்வு; ஒரு சவரன் ரூ.70,200!
-
வெறிநாய் கடித்து சிறுமி உயிரிழப்பு; தடுப்பூசி போட்டும் பயனில்லை; ஒரே மாதத்தில் 3வது சம்பவம்
-
தே.ஜ., கூட்டணியிலேயே நீடிப்பேன்; மீண்டும் மீண்டும் சொல்கிறார் நிதீஷ் குமார்
-
அக்னி நட்சத்திரம் முதல் நாளில் அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் திருவிழாவில் நடனமாடுவதில் தகராறு; கத்தியால் குத்தி சிறுவன் கொலை