கல்வராயன் மலையில் கலெக்டர் ஆய்வு

கச்சிராயபாளையம்; கல்வராயன் மலையில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.
கல்வராயன்மலையில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொட்டியம் கிராமத்தில் பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ 4.26 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள், மேல் பரிகம் கிராமத்தில், ரூ.7 லட்சம் மதிப்பில் நிழற்குடை, ரூ. 9.87 லட்சத்தில் அமைக்கும் மேல் நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணிகளை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.
மேலும் குண்டியாநத்தம் கிராமத்தில் ராஷ்ட்ரிய கிராம ஸ்வராஜ் அபியான் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்படும் புதிய ஊராட்சி அலுவலக கட்டடம், கொடுந்துறையில் ரூ.13.56 லட்சத்தில் கட்டப்படும் புதிய நியாய விலை கடை கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து மாவடிப்பட்டு அரசு மருத்துவமனையில் நடைபாதை பணிகள், கொட்டபுத்தூர் கிராமத்தில் முதல்வர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7.28 கோடி மதிப்பில் அமைக்கப்படும் மோட்டுவளவு சாலை அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
கரியாலூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள வட்டார நாற்றுப்பண்ணையை ஆய்வு செய்து, விவசாயிகள் பயன்பெறும் வகையில் செடிகளை அதிகளவில் உற்பத்தி செய்து பயனாளிகளுக்கு வழங்கிட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது பி.டி.ஓ., ஜோசப் ஆனந்தராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மேலும்
-
ஜம்மு காஷ்மீரில் ஜெயில் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி; பாதுகாப்பு அதிகரிப்பு
-
வாரத் துவக்கத்தில் தங்கம் விலை சற்று உயர்வு; ஒரு சவரன் ரூ.70,200!
-
வெறிநாய் கடித்து சிறுமி உயிரிழப்பு; தடுப்பூசி போட்டும் பயனில்லை; ஒரே மாதத்தில் 3வது சம்பவம்
-
தே.ஜ., கூட்டணியிலேயே நீடிப்பேன்; மீண்டும் மீண்டும் சொல்கிறார் நிதீஷ் குமார்
-
அக்னி நட்சத்திரம் முதல் நாளில் அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் திருவிழாவில் நடனமாடுவதில் தகராறு; கத்தியால் குத்தி சிறுவன் கொலை