வரதராஜ பெருமாள் கோவில் பிரமோற்சவம்

நடுவீரப்பட்டு; பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

பண்ருட்டி ஸ்ரீதேவி பூமிதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரமோற்சவம் சிறப்பு பூஜைகள் மற்றும் கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.

மாலை இந்திர விமானத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.

இன்று முதல் தினமும் காலை சுவாமி கோவில் உள் புறப்பாடு, மாலை சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது.

வரும் 12ம் தேதி காலை 5:30 மணிக்கு மேல் 6:30 மணிக்குள் திருத்தேரில் சுவாமி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை உபயதாரர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Advertisement