சாத்துாரில் போக்குவரத்திற்கு இடையூறாக பெட்டிக்கடைகள்

சாத்துார் : சாத்துாரில் போக்குவரத்துக்கு இடையூறாக பெட்டிக்கடைகளை அகற்றிவிட்டு வியாபாரிகளுக்கு புதிய தள்ளு வண்டிகடைகளை வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாத்துார் தாலுகா அலுவலகம் முதல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வரையில் மக்கள் நடந்து செல்வதற்காக பல லட்சம் மதிப்பில் மழைநீர் வாறுகாலும் அதன் மீது மற்றும் அருகில் நடைபயிற்சி செய்ய வசதியாக பேவர் ப்ளாக் கல் பதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைக்கப்பட்ட பேவர் ப்ளாக் நடைபாதையில் தற்போது நகராட்சி அனுமதி பெற்ற பெட்டிக் கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பயன்படுத்துவதற்காக ைக்கப்பட்ட நடைமேடை முழுவதுமாக கடைக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட நடைமேடை மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே கடைக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இது நகரின் அழகையும் அரசின் நோக்கத்தை சிதைக்கும் வகையில் உள்ளது.

மேலும் மிகப்பெரிய அளவிலான இந்தப் பெட்டிக்கடைகள் அதிக அளவிலான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கொள்வதால் மீண்டும் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் நிலை உள்ளது.

தற்போது நகராட்சி மூலம் வழங்கப்படும் சிறிய அளவிலான தள்ளுவண்டி கடைகள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையிலும் வியாபாரிகள் பயன்படுத்தக்கூடிய வகையில் வசதியாக உள்ளதால் ஏற்கனவே வழங்கப்பட்ட பெட்டிக்கடைகளை திரும்ப பெற்று புதிய சிறிய அளவிலான தள்ளுவண்டி கடைகளை வியாபாரிகளுக்கு வழங்கிட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement