பட்டா கேட்டு மனு

விழுப்புரம்: வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த துலக்கம்பட்டு கிராம பொதுமக்கள் மனுவில்;

நாங்கள் 30 குடும்பத்தினர், 40 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றோம்.

எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது.

Advertisement