அரசு பஸ்- பால் வேன் நேருக்கு நேர் மோதல்; நள்ளிரவில் நடந்த விபத்தில் 3 பேர் பலியான சோகம்

5


சிவகங்கை: சிவகங்கை காரைக்குடியில் அரசு பஸ், பால் வேன் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். நள்ளிரவு ஒரு மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்து இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை தேனாற்று பாலம் அருகே திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசு பஸ்சும், தேவகோட்டையில் இருந்து காரைக்குடியை நோக்கி வந்த தனியார் பால் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்து நள்ளிரவு ஒரு மணிக்கு நிகழ்ந்துள்ளது.


பால் வேனில் பயணம் செய்த, ஆறுமுகம், கருணா, தமிழ்பாண்டியன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பால் வேனை ஓட்டிய ரூபன், அரசு பஸ் டிரைவர் நாகராஜ், கண்டக்டர் செல்வேந்திர பிரசாத் ஆகியோர் ஆபத்தான நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.



மேலும் பஸ்சில் பயணித்த பயணிகள் 10க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் காரைக்குடி அரசு பஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 4 பேர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். நள்ளிரவு ஒரு மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்து இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் விபத்து நிகழாமல் இருக்க விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது.

Advertisement