முழுமையாக பணி செய்யாத ஒப்பந்த நிறுவனத்திற்கு முழு தொகையை வழங்கினால் வழக்கு தொடருவோம்

சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தில் முழுமையாக பணி செய்யாத ஒப்பந்த நிறுவனத்திற்கு முழு தொகையை வழங்கினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என கவுன்சிலர்கள் ஆவேசமாக கூறினர்.
சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. மேயர் சங்கீதா தலைமை வகித்தார். துணை மேயர் விக்னேஷ்பிரியா, கமிஷனர் சரவணன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
துரைபாண்டி, தி.மு.க.,: சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் செங்குளம் கண்மாய் கரையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பயன்படுத்தி வரும் பொது சுகாதார வளாகத்தை இடிக்கும் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்.
கமிஷனர்: வருவாய்த்துறை சார்பில் நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள சுகாதார வளாகத்தை இடிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. அதற்கு நாம் நடவடிக்கை எடுக்காவிட்டால், வருவாய்த்துறை நேரடியாக நடவடிக்கை எடுக்கும். சட்டத்திற்கு உட்பட்டு மாமன்றம் செயல்பட வேண்டும். இதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும், என்றார்.
அதனைக் தொடர்ந்து தீர்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கவுன்சிலர் துரைபாண்டி மேயர் இருக்கை முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அதற்கு ஆதரவாக திருத்தங்கல் பகுதியை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் மேயர் இருக்கை முன் நின்று தீர்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தினர்.
பொது சுகாதார வளாகத்தை இடிக்கும் தீர்மானம் தவிர பிற 32 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக மேயர் தெரிவித்ததை அடுத்து கவுன்சிலர்கள் இருக்கையில் சென்று அமர்ந்தனர்.
சேதுராமன், தி.மு.க.,: திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் துாய்மை பணி மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனம் குறைந்த பணியாளர்களை கொண்டு, போதிய வாகனங்கள் வழங்காமல் 54 டன் குப்பை சேகரித்து வழங்க வேண்டிய நிலையில், 25 டன் குப்பை மட்டுமே சேகரித்து வழங்குகிறது. ஒப்பந்த நிறுவனத்துக்கு ஆதரவாக சில அதிகாரிகள் செயல்பட்டு முழு தொகையான ரூ.8 கோடியை ஒதுக்குகின்றனர். முறையாக பணி செய்யாத நிலையில், முழு தொகையை வழங்கினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும், என்றார். தொடர்ந்து கவுன்சிலர்களும் இதனை வலியுறுத்தினர்.
மேயர்: இப்பிரச்னை குறித்து கமிஷனருடன் ஆலோசித்து தீர்வு காணப்படும்.
கரை முருகன், அ.தி.மு.க.,: அறிவுசார் மையத்தில் தினசரி நாளிதழ்கள் மற்றும் பள்ளி பாட புத்தகங்கள் இல்லாததால் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
துணை மேயர்: கவுன்சில் கூட்டம் ஒவ்வொரு முறையும் கூச்சல் குழப்பமாக நடப்பதற்கு அதிகாரிகள் பணி செய்யாததே காரணம். கவுன்சிலர்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, கூட்டம் அமைதியாக நடத்த கமிஷனர் உதவ வேண்டும், என்றார்.
கமிஷனர்: கவுன்சிலர்கள் வாட்ஸ் அப் குரூப்பில் தெரிவிக்கும் புகார்களுக்கு தனி பதிவேடு ஏற்படுத்தி உடனடியாக குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பாக்கியலட்சுமி, தி.மு.க.,: 27 வது வார்டு கந்தபுரம் காலனி சிறுவர் பூங்கா ஆக்கிரமிப்பு தொடர்பாக 2 ஆண்டுகளாக புகார் அளித்து வருகிறேன். ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படும் நகர திட்டமிடுநர் மதியழகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கமிஷனர்: தகுந்த ஆதாரம் இருந்தால் கொடுங்கள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஆதாரம் இல்லாமல் பொதுவாக பேசுவதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியாது. இவ்வாறு விவாதம் நடந்தது.
மேலும்
-
டிப்பர் லாரி மீது கார் மோதல்: பஞ்சாப் சாலை விபத்தில் 6 மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் பலி
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் ஷர்மா ஓய்வு
-
பாக்., மீது நடந்த தாக்குதல்: வீடியோ வெளியிட்டது இந்திய ராணுவம்
-
சென்னை பவுலிங்; கோல்கட்டாவுக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் உர்வில் படேல்!
-
பி.டி.12 யானைக்கு ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்க முடிவு
-
பூவந்தியில் கரையான் அரித்த ரூ.1 லட்சம்: ரிசர்வ் வங்கி மூலம் மீட்க முயற்சி