ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த மழையால் தேசிய நெடுஞ்சாலையில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள், மக்கள் சிரமப்பட்டனர்.
நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் அக்னி வெயில் துவங்கியதால் வெப்ப சலனம் அதிகரித்தது. இதனால் சுட்டெரித்த வெயிலால் மக்கள் பாதித்தனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு ராமேஸ்வரத்தில் மழை பெய்தது. இதனால் கோயில் நான்கு ரத வீதி, நகராட்சி அலுவலகம் முன்பு தண்ணீர் ஓடி கடலில் கலந்தது.
ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகே தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் 100 மீட்டருக்கு தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தது. இதனால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றது. பஸ் ஸ்டாண்ட் அருகே கடைகள் முன்பு மணல், கட்டட கழிவுகளை கொட்டி மேடு ஆனதால் லேசான மழை பெய்தாலும் தனுஷ்கோடி சாலையில் தண்ணீர் தேங்குவது வழக்கமாக உள்ளது. எனவே கட்டட கழிவுகளை அகற்றிட நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.
மேலும்
-
சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள்: இணையத்தில் வெளியீடு
-
கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!
-
சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
-
அரசு பஸ்- பால் வேன் நேருக்கு நேர் மோதல்; நள்ளிரவில் நடந்த விபத்தில் 3 பேர் பலியான சோகம்
-
வடகாட்டில் இரு தரப்பினரிடம் ஏற்பட்ட மோதலால் 10 க்கு மேற்பட்டவர்கள் காயம் : ஒருவருக்கு அருவாள் வெட்டு
-
அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதி!