பயன்பாடில்லாத மருத்துவமனை சிகிச்சை பெற முடியாமல் தவிப்பு

காரைக்குடி: காரைக்குடி முத்துப்பட்டினத்தில் மூடப்பட்டுஉள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மீண்டும் திறந்து சிகிச்சை அளிக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
காரைக்குடி முத்துப்பட்டினத்தில், நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 70 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தது. தினமும் நுாற்றுக்கணக்கான புறநோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் வந்தனர்.
கடந்த ஆண்டு முத்துப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம் நகர்ப்புற நலவாழ்வு மையமாக டி.டி., நகருக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனால் முத்துப்பட்டினம் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற பல மைல் துாரம் அலைய வேண்டியுள்ளது.
மருத்துவமனையை இடமாற்றம் செய்ததை கண்டித்து பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததோடு போராட்டங்களும் நடத்தினர். ஆனால் நடவடிக்கை இல்லை.
எனவே, மக்கள் நலன் கருதி பயன்பாடின்றி கிடக்கும் முத்துப்பட்டினம் பழைய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
மாநகர் நல அலுவலர் வினோத் ராஜா கூறுகையில், முத்துப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டடம், தற்போது துணை சுகாதார நிலையமாக செயல்படுகிறது. வாரத்திற்கு ஒருமுறை கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
இதனை, நகர்ப்புற நலவாழ்வு மையமாக தரம்உயர்த்துவதற்குகோரிக்கை விடப்பட்டுள்ளது. விரைவில், நகர்ப்புற நலவாழ்வு மையமாக தரம் உயர்த்தப்படும்.
மேலும்
-
சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள்: இணையத்தில் வெளியீடு
-
கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!
-
சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
-
அரசு பஸ்- பால் வேன் நேருக்கு நேர் மோதல்; நள்ளிரவில் நடந்த விபத்தில் 3 பேர் பலியான சோகம்
-
வடகாட்டில் இரு தரப்பினரிடம் ஏற்பட்ட மோதலால் 10 க்கு மேற்பட்டவர்கள் காயம் : ஒருவருக்கு அருவாள் வெட்டு
-
அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதி!