அரசு மருத்துவக் கல்லூரியில் ஆயுதப்படை போலீசாருக்கு பயிற்சி

மயிலம்: முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், காவலர் பயிற்சி பள்ளி ஆயுதப்படை பெண் போலீசருக்கு பயிற்சி முகாம் நடந்தது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 273 ஆயுதப்படை பெண் போலீசருக்கு, மயிலம் அருகில் உள்ள கொல்லியங்குணம் காவலர் பயிற்சி பள்ளியில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது.
போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் அன்றாட பதிவுகளை எவ்வாறு எழுதுவது. வழக்குப் பதிவு செய்யும் முறைகள், துப்பாக்கி சுடுதல், ரோந்து பணி முறைகள் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் பயிற்சி பாடத்திட்டத்தில், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை செய்யும் வழிமுறைகள், ஆவணங்கள் தயார் செய்யும் முறை குறித்த சிறப்பு பயிற்சி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்தது.
கல்லுாரி டீன் கீதாஞ்சலி, ஆர்.எம்.ஓ., ரவிக்குமார், கொல்லியங்குணம் காவலர் பயிற்சி பள்ளி பொறுப்பு முதல்வர் எட்டியப்பன், இன்ஸ்பெக்டர்கள் பாலின், தீபா, சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
மாநாட்டு நிபந்தனைகளுக்கு உத்தரவாதம் ஐ.ஜி.,யிடம் அளிக்க பா.ம.க.,வுக்கு உத்தரவு
-
காஞ்சி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி...93.27 சதவீதம்: 0.99 சதவீதம் கூடுதல் தேர்ச்சி விகிதம்
-
பெண்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் தினகரன் வலியுறுத்தல்
-
உயிரியல் பூங்கா துாதுவராக மாணவர்களுக்கு வாய்ப்பு
-
அணி பிரிவுகளின் தலைவர் பதவி தமிழக பா.ஜ.,வில் கடும் போட்டி
-
துரைமுருகன் வசமிருந்த கனிமவளம் பறிப்பு அமைச்சர் ரகுபதியிடம் ஒப்படைப்பு ஏன்?