திருவள்ளூர்: புகார் பெட்டி ; வடிகால் இன்றி கழிவுநீர் தேக்கம்

வடிகால் இன்றி கழிவுநீர் தேக்கம்
கும்மிடிப்பூண்டி, கன்னியம்மன் கோவில் மேம்பால பகுதியில், தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலை உள்ளது. ஆந்திரா நோக்கிய திசையில் உள்ள இணைப்புச் சாலையில், மழைநீர் வடிந்து செல்ல வழியில்லை.
இதனால், அந்த சாலையின் தாழ்வான பகுதியில், மழைநீருடன் அப்பகுதியில் வெளியேற்றப்படும் கழிவுநீரும் கலந்து, சாலையில் தேங்கி நிற்பதால் சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அப்பகுதியில் மழைநீர் வடிந்து செல்வதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும்.
- அ.முகமது சபீக்,
கும்மிடிப்பூண்டி.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement