மண்டபம் கடற்கரையில் ஒதுங்கிய சிலிண்டர்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடற்கரையில் ஒதுங்கிய சமையல் காஸ் சிலிண்டரை மரைன் போலீசார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

மண்டபம் தோணித்துறை கடற்கரையில் ஒன்றரை அடி உயரத்தில் சமையல் காஸ் சிலிண்டர் கரை ஒதுங்கி கிடந்தது. இதனை மண்டபம் மரைன் போலீசார் கைப்பற்றி விசாரித்தனர்.

இந்த சமையல் சிலிண்டர் மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடித்த ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகு மற்றும் மீன்பிடி கப்பலில் இருந்து தவறி கடலில் விழுந்திருக்க கூடும் எனவும், தற்போது இந்த சிலிண்டர் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement