பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி மாணவர்களுக்கு பாராட்டு
உடுமலை : உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 590க்கு மேல் ஒரு மாணவர், 580 மதிப்பெண்ணுக்கு மேல் நான்கு பேர், 550க்கு மேல் 30 மாணவர்கள், 500க்கு மேல் 83 மாணவர்கள் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
மேலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 10 பேர், வணிகவியலில் 12 பேர், கணிதத்தில் 6, வணிக கணிதத்தில் 5, கணித செயல்பாடுகளில் 14, கணக்கு பதிவியலில் 10 பேர் சதம் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி முதல்வர் மாலா, பள்ளித்தலைவர் ராமசாமி, செயலாளர் கார்த்திக்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement