வீடுகளுக்கு எப்.ஆர்.பி., தொட்டிகளை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை!

சொந்தமாக வீடு வாங்கும் போது அதில் குடிநீர் வழங்கல், கழிவு நீர் வடிகால் தொடர்பான அடிப்படை வசதிகள் எப்படி செய்யப்பட்டுள்ளது என்பதை தெளிவாக அறிய வேண்டும். பெரும்பாலான இடங்களில் வீடு வாங்குவோர் இந்த அடிப்படை வசதிகள் இருக்கிறதா என்பதை மேலோட்டமாக விசாரிப்பதுடன் அமைதியாகிவிடுகின்றனர்.
நீங்கள் வாங்க நினைக்கும் வீடு அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் அமைந்து இருந்தால், முதலில் அங்கு மொத்தம் எத்தனை வீடுகள்கட்டப்பட்டுள்ளன என்று பாருங்கள். அதிக எண்ணிக்கையில் வீடுகள் இருந்தால் அதில் கழிவு நீர் வடிகால், குடிநீர் வழங்கல் ஆகியவற்றுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும்.
குறைந்த எண்ணிக்கையிலான வீடுகள் இருந்தால், அங்கு, இந்த வசதிகள், உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக செய்ய்பட்டு இருக்கும். அதே நேரம் தனி வீடு என்றால் அங்கும், உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாகவே இது போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருக்கும்.
குறிப்பாக பாதாள சாக்கடை வசதி இல்லாத பகுதிகளில் கான்கிரீட்டால் செப்டிக் டேங்க் கட்டி அதில் தான் கழிவு நீரை சேகரிக்கின்றனர். இதில் நீண்டகாலமாக கான்கிரீட்டை பயன்படுத்தியே செப்டிக் டேங்க் அமைப்பது பல்வேறு பகுதிகளில் வழக்கமாக உள்ளது.
கான்கிரீட் கட்டுமான முறையில் செப்டிக் டேங்க் அமைக்கும் போது அதில் நீர்க்கசிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால், கழிவு நீர் நிலத்தில் இறங்குவது மட்டுமல்லாது குடிநீர் விநியோகத்தில் கலந்து சுகாதார சீர்கேடு போன்ற பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும்.
இதற்கு தீர்வாக, தற்போது பெரும்பாலான இடங்களில், எப்.ஆர்.பி., டேங்க்குகள் அதிக அளவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. தொழிற்சாலைகளில் பல்வேறு தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு இந்த தொட்டிகள் தயாரிக்கப்படுவதால் இதில் கசிவுகள் ஏற்பட வாய்ப்பு இல்லை.
இதில் சில நிறுவனங்கள், கழிவுநீரை சேகரித்து, சேமித்து வைப்பதுடன் அதை, உயிரி தொழில்நுட்ப முறையில் சுத்திகரிப்பதற்கான வசதிகளையும் செய்து கொடுக்கின்றன. இது போன்ற டேங்க் அமைக்க நினைப்போர் உரிய அளவில் இடம் ஒதுக்கினால் மட்டும் போதும்.
தயாரிப்பு நிறுவனங்களே உங்கள் இடத்துக்கு டேங்க்கை கொண்டு வந்து, நிலத்தில் அமைத்து, இணைப்புகளை கொடுத்து வேலையை முடித்து கொடுக்கின்றன. இதில் பல்வேறு அளவுகளில், பல்வேறு வண்ணங்களில் தொட்டிகள் கிடைப்பதால், இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது.
உங்கள் வீடு அமைந்துள்ள பகுதியில் பாதாள சாக்கடை வசதி இல்லை என்றால் அதற்காக கான்கிரீட் கட்டுமானத்தில், செப்டிக் டேங்க் அமைப்பதற்கு பதில் இது போன்ற வசதிகளை பயன்படுத்தலாம். நிலத்துக்கும், நிலத்தடி நீர்வளத்துக்கும் பாதிப்பு இல்லாத வகையில் இவை அமைந்துள்ளன என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
மேலும்
-
போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு
-
பொய்யான தகவல்களை பரப்பும் பாகிஸ்தான்; வெளியுறவு துறை செயலர் மிஸ்ரி குற்றச்சாட்டு
-
இந்தியா- பாகிஸ்தான் போர் பதட்டம்: தணிக்கும் முயற்சியில் ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விருப்பம்
-
போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை
-
அறத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது தாக்குதல்; அண்ணாமலை பேட்டி
-
ஐ.எம்.எப்., முடிவுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அதிருப்தி