போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை

புதுடில்லி: போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், டில்லியில் பிரதமர் மோடியுடன் , தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை நடத்தினார்.
எல்லை பகுதியில், பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தி உள்ளது. ஆனால், வானிலையே இடைமறித்து சுட்டு வீழ்த்தி நமது பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்'' என இந்திய ராணுவம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், எல்லையில் நிலவும் போர் பதற்றம் குறித்து, டில்லியில் பிரதமர் மோடியுடன் , தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை நடத்தினார். அடுத்தடுத்து அத்துமீறும் பாகிஸ்தானின் தாக்குதல் குறித்தும், தாக்குதல்களை முறியடித்து வருவது குறித்தும் பிரதமர் மோடிக்கு அஜித் தோவல் விளக்கம் அளித்துள்ளார்.


மேலும்
-
தகர்த்தெறிந்த இந்தியா; பாக்., ட்ரோன்கள், ஏவுகணைகள் சிதறியது; புகைப்படம் ஆல்பம் இதோ!
-
இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் பாகிஸ்தானால் முடியாது; சசி தரூர்
-
முப்படை தளபதிகளுடன் மோடி சந்திப்பு!
-
பயங்கரவாத முகாம்கள் அழிப்பு; புதிய வீடியோ வெளியிட்டு ராணுவம் விளக்கம்!
-
ராணுவத்திற்கு உதவ தயார்; சண்டிகரில் குவிந்த இளைஞர்கள்!
-
அரசு பள்ளியில் சாதனை