ராணுவத்திற்கு உதவ தயார்; சண்டிகரில் குவிந்த இளைஞர்கள்!

சண்டிகர்: பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவ வீரர்களுக்கு உதவ தயார் எனக் கூறி சண்டிகரில் இளைஞர்கள் குவிந்தனர்.
நம் ராணுவத்துக்கான ஆதரவு சேவைகளை அளிக்கும் பகுதி நேர தன்னார்வலர்களை உறுப்பினர்களாக கொண்ட ராணுவ ரிசர்வ் படையாக, 'டெரிடோரியல் ஆர்மி' எனப்படும் பிராந்திய ராணுவம் செயல்படுகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள இந்த நேரத்தில், பிராந்திய ராணுவத்தினரை உதவிக்கு அழைத்துக்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான முழு அதிகாரத்தை நம் ராணுவ தளபதிக்கு வழங்கி உள்ளது. இந்நிலையில், இந்திய ராணுவ வீரர்களுக்கு உதவ தயார் எனக் கூறி சண்டிகரில் இளைஞர்கள் குவிந்தனர். தன்னார்வலர்கள் தேவை என்ற அறிவிப்பை தொடர்ந்து ''ராணுவத்திற்கு உதவ தயார்'' என முழக்கமிட்டு சண்டிகரில் இளைஞர்கள், இளம்பெண்கள் குவிந்தனர்.
''நாங்கள் நாட்டிற்கு சேவை செய்ய விரும்புகிறோம். ராணுவத்திற்கு உதவியாக, தன்னார்வலர்களாக பணியாற்ற தயாராக இருக்கிறோம்'' என குவிந்த இளைஞர்களில் ஒருவர் தெரிவித்தார். சண்டிகர் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு இருந்ததை தொடர்ந்து, காலை 6 மணி முதலே ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதனால் கடும் கூட்டம் நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலையில் நீண்ட நேரமாக காத்திருந்து வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். கூடியிருந்த இளைஞர்கள் அனைவரும், எதையும் கண்டுக்கொள்ளாமல் தேசத்திற்காக பணியாற்ற நாங்கள் அதிக ஆர்வத்துடன் இருக்கிறோம் என்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர்.
வாசகர் கருத்து (23)
ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி - Chennai,இந்தியா
10 மே,2025 - 15:45 Report Abuse

0
0
Reply
ganesha - tamilnadu,இந்தியா
10 மே,2025 - 15:37 Report Abuse

0
0
Reply
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
10 மே,2025 - 15:26 Report Abuse

0
0
Reply
சூரியா - ,
10 மே,2025 - 15:25 Report Abuse

0
0
Reply
Murugesan - Abu Dhabi,இந்தியா
10 மே,2025 - 15:15 Report Abuse

0
0
Reply
vinoth kumar - pondicherry,இந்தியா
10 மே,2025 - 15:06 Report Abuse

0
0
Reply
N Srinivasan - Chennai,இந்தியா
10 மே,2025 - 14:58 Report Abuse

0
0
Reply
சிவம் - ,
10 மே,2025 - 14:55 Report Abuse

0
0
Reply
Kumar Kumzi - ,இந்தியா
10 மே,2025 - 14:51 Report Abuse

0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
10 மே,2025 - 14:13 Report Abuse

0
0
vinoth kumar - pondicherry,இந்தியா
10 மே,2025 - 14:49Report Abuse

0
0
Reply
மேலும் 12 கருத்துக்கள்...
மேலும்
-
இந்தியா தாக்கிய பாக்., விமானப்படை தளங்கள் பட்டியல்!
-
ஜெய்சால்மரில் அமலானது லாக்டவுன்: ரயில் சேவைகள் உடனடி ரத்து
-
பயங்கரவாத தாக்குதல் நடந்தால் போராக கருதப்படும்: இந்தியா முடிவு
-
சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் இதுதான்: கமிஷனர் அருண்
-
தேசிய பாதுகாப்பு நிதிக்கு ஒரு மாத சம்பளம்: இளையராஜா
-
போர் குறித்து தவறான சமூக வலைதள பதிவுகள் நீக்கம்; தண்டனைக்குரிய குற்றம் என எச்சரிக்கை
Advertisement
Advertisement