மத்திய உள்துறை செயலர் மாநில தலைமைச் செயலர்களுடன் ஆலோசனை

புதுடில்லி: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை மீறி பாகிஸ்தான் எல்லையோர பகுதிகளில் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. பாகிஸ்தான் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் எல்லையோர மாநில தலைமைச் செயலர்களுடன் மத்திய உள்த்துறை செயலர் கோவிந்த் மோகன் காணொளி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Advertisement