சண்டேஸ்பெஷல்

இவர் பிறந்தது வளர்ந்தது சென்னை. சிறிய வயதிலேயே அப்பாவை இழந்து அம்மா அரவணைப்பில் தங்கையுடன் வளர்ந்தார். பள்ளியில் படித்த போதே ஏதாவது ஒரு பணிக்கு செல்ல வேண்டும் என்ற வேட்கையில் இருந்தார். பள்ளி படிப்பை முடித்ததும் சென்னையில் ரிக்கார்டிங் தியேட்டரில் டெக்னீஷியனாக சேர்ந்திருக்கிறார். அங்கிருந்து வெள்ளித் திரையில் நுழைந்து சின்னத்திரைக்கு வந்ததே பெரிய கதை என்கிறார் ஹென்ஷா.
தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவர் கூறியது:
நான் இந்தளவுக்கு வருவேன் என நினைத்து கூட பார்க்கவில்லை. பெரிய படிப்பு படிக்கவில்லை. ஆனாலும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தது. அப்போது தான் தோழி ரிக்கார்டிங் டெக்னீஷியனாக வருகிறாராயா என கேட்டார். அப்படி தான் ரிக்கார்டிங் தியேட்டரில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு சென்ற பிறகு தான் அதை விட பெரிதாக சினிமா உலகம் இருக்கிறது என தெரிந்து கொண்டேன்.
அங்கு வந்த சினிமா இயக்குனர் ஒருவர் என் தோற்றத்தை கண்டு சினிமாவில் நடிக்கிறீர்களா எனக் கேட்டார். முதலில் தயக்கமாக இருந்தாலும் கரும்பு தின்ன கூலியா என்ற பழமொழி தான் நினைவுக்கு வந்தது. உடனே ஓ.கே., சொல்லி விட்டேன். ஆனால் முதன் முறையாக நடித்த அந்த படம் பல பிரச்னைகளால் வெளிவராதது ஏமாற்றத்தை தந்தது.
அந்த படம் பெயர் கூட எனக்கு தற்போது ஞாபகம் இல்லை. ஆனாலும் மனம் தளர விடவில்லை. அந்த படத்தில் ஏற்பட்ட அனுபவம் காரணமாக நடிப்பு பயிற்சிக்கு சேர்ந்தேன். பிறகு அஜித் நடித்த அமராவதி படத்தை தயாரித்த நிறுவனம் கபடன் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறீர்களா என அணுகினர். அந்த படம் ஓரளவுக்கு பெயர் பெற்று கொடுத்தது. அதையடுத்து தொடர்ந்து சாமி 2, நானும் ரவுடி தான், ரஜினி முருகன், மாப்பிள்ளை சிங்கம், கணிதன், இட்லி, நேற்று இன்று நாளை என 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன்.
எல்லா படங்களிலுமே நாயகியின் தோழி பாத்திரம் தான். இடையே சில விளம்பர படங்களிலும் நடித்தேன். விளம்பரம், சினிமாவில் பிஸியாக இருந்த போது தான் சின்னத்திரை வாய்ப்பு வந்தது. முதலில் மோகினி சீரியல் வாய்ப்பு வந்தது. யாரடி நீ மோகினி, கோகுலத்தில் சீதை, பூவே பூச்சூட வா என பத்துக்கும் மேற்பட்ட சீரியல்களை முடித்து விட்டேன். தற்போது கயல், காதலும் மோதலும் என்ற சீரியல்கள் மற்றும் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறேன்.
படங்களில் பிஸியாக இருந்த போது உறவினரான தீபனுடன் காதல் ஏற்பட்டு கல்யாணத்தில் முடிந்தது. திருமணமான நேரத்தில் அவரது குடும்பத்தினர் நான் நடிகையாக இருப்பதால் சற்று யோசித்தனர். இதனால் ஆறு மாதங்கள் வரை நடிப்பிற்கு பிரேக் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் தீபன், நடிப்பில் எனக்கு இருந்த ஆர்வத்தை புரிந்து கொண்டு உற்சாகமூட்டினார். அவரால் தான் இதுவரை சினிமா, சீரியல்களில் என்னால் நீடிக்க முடிகிறது.
தற்போது வீடு இன்டிரீயர் டிசைனிங்கிலும் ஆர்வம். இதற்காக தனியாக ஒரு நிறுவனத்தை துவக்கியுள்ளேன். என் வீடு கூட என் இன்டிரீயர் டிசைனிங்கில் அமைந்தது. இதனால் கேட்கவே வேண்டாம். என் வீட்டிற்கு வருவோர் என்னை பாராட்டாமல் இருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு அழகாக இருக்கும். பெண்கள் தைரியமாக தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வாழ்வில் நினைத்தை சாதிக்க முடியும் என்றார்.
மேலும்
-
காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? காலை 11 மணிக்கு ராணுவம் முக்கிய அறிவிப்பு
-
கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை: முதுமலை யானைகள் முகாமில் ஒப்படைப்பு
-
என்.எல்.சி.,யில் தீ விபத்து; பல கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் சேதம்!
-
போர் நிறுத்த ஒப்பந்தம்; உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு புடின் அழைப்பு!
-
'கொடுத்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்றணும்'