நாட்டுக்கு எதிராக பிரசாரம்; நடவடிக்கை துவக்கிய அரசு; டில்லி உஷ்ஷ்...

14


புதுடில்லி: எந்த ஒரு நாடும், மற்ற நாடுகளுடன் போருக்கு சென்றால், அந்தந்த நாடுகளின் பத்திரிகைகளும், அரசியல் தலைவர்களும், அரசை ஆதரிப்பதுதான் வழக்கம்.


ஆனால், இந்தியாவில் உள்ள ஒரு சில பத்திரிகைகள், நம் நாட்டிற்கு எதிராக செயல்பட்டு வருவதாக, உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, 80,000 எக்ஸ் கணக்குகள் மற்றும் ஒரு இணையதளம் ஆகியவற்றை மத்திய அரசு முடக்கி உள்ளது.

சமூக வலைதளங்களில் இந்தியாவிற்கு எதிராக நம் நாட்டினர் சிலர் பிரசாரம் செய்து வருகின்றனர். 'இதை உள்துறை அமைச்சகம் மிகவும் கூர்ந்து கண்காணித்து வருகிறது. விரைவில், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்; அதுவும், மிகவும் கடுமையான நடவடிக்கையாக இருக்கும். ஒரு பத்திரிகை நடக்காத ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாம்; பின் அதை நீக்கிவிட்டது' என்கின்றனர், உள்துறை அதிகாரிகள் வட்டாரம்.

Advertisement