போர் நிறுத்தம் முதல்வர் வரவேற்பு

பெங்களூரு: ''இந்தியாவும், பாகிஸ்தானும் யுத்தத்தை நிறுத்தி, பரஸ்பரம் பேச்சு நடத்த முன் வந்ததை நான் பாராட்டுகிறேன்,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

இது தொடர்பாக, நேற்று அவர் அளித்த பேட்டி:

இந்தியாவும், பாகிஸ்தானும் யுத்தத்தை நிறுத்தி, சமாதான பேச்சு துவக்க முன் வந்திருப்பது, வரவேற்கத்தக்க விஷயமாகும். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததால், மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, போர் நிறுத்தம் குறித்து அறிவித்துள்ளார்.

போர் நிறுத்தத்தை நான் பாராட்டுகிறேன். ஆனால் பயங்கரவாதத்துக்கு எதிரான நமது போராட்டம் நீடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement