தற்கொலை

விருதுநகர் : விருதுநகர் வீரச்செல்லையாபுரம் டிராக்டர் ஓட்டுனர் மாரிமுத்து 37. இவர் தனியார் வங்கியில் ஒரு லட்சம் கடன் பெற்று 5 மாதம் வட்டி செலுத்தினார். தனியார் பைனான்ஸ், ஊரில் உள்ள சிலரிடம் மேலும் கடன் பெற்று டிராக்டர் வாங்கிய நிலையில் குடிக்கு அடிமையாகி கடனை செலுத்தாததால் கடன் கொடுத்தவர்கள் டிராக்டரை எடுத்துச் சென்றனர்.

அடிக்கடி குடித்துவிட்டு மனைவியுடன் பிரச்னையில் ஈடுபட்டதால் அவரும் பிள்ளைகளுடன் அவரது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனமுடைந்த மாரிமுத்து சம்பவத்தன்று விஷம் குடித்து இறந்தார் ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement