மனிதநேய அறக்கட்டளையின் 27 பேர் 'குரூப் 1'ல் வெற்றி

சென்னை, சமூக மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கிய மக்களுக்கும் உதவும் வகையில், சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை செயல்படுகிறது. இங்கு, அரசு பணியாளர் தேர்வில் பயிற்சி பெற்று, வெற்றி பெற்ற பல மாணவர்கள் அரசு பணிகளை பெற்றுள்ளனர்.

இந்நிலையில், தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம், 96 காலி பணியிடங்களுக்கான 'குரூப் - 1' தேர்வுக்கான அறிவிப்பை, 2024 ஜனவரியில் வெளியிட்டது.

முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முக தேர்வு என, மூன்று கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து, இம்மாதம், 9ம் தேதி வெளியிடப்பட்ட தர வரிசை பட்டியலில், மனிதநேய அறக்கட்டளை கட்டணமில்லா கல்வியகத்தில் பயின்ற, 27 மாணவ - மாணவியர் தேர்வாகியுள்ளனர்.

அதன்படி, இரண்டு பேர் துணை கலெக்டர், ஒன்பது பேர் டி.எஸ்.பி., ஐந்து பேர் வணிக வரி துறை உதவி கமிஷனர், எட்டு பேர் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், மூன்று பேர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பணியிடங்களுக்கு ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.

Advertisement