வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய நபருக்கு 'காப்பு'

மாதவரம், மாதவரம் தபால் பெட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ், 30. நேற்று முன்தினம் இரவு மின் தடை காரணமாக, ரமேஷின் மனைவி காற்று வசதிக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து, குழந்தையுடன் துாங்கிக் கொண்டிருந்தார்.

நல்ல உறக்கத்தில் இருந்த வேளையில், அதே தெருவில் வசிக்கும் காமேஷ், 53, என்பவர், வீட்டிற்குள் புகுந்து ரமேஷின் மனைவி அருகே படுத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். துாக்கத்தில் இருந்து விழித்த ரமேஷின் மனைவி கூச்சலிட, காமேஷ் அங்கிருந்து தப்பி ஓடினார்.

இது குறித்து மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரித்த போலீசார், மாதவரம் ரவுண்டானா பேருந்து நிலையம் அருகே பதுங்கியிருந்த காமேைஷ கைது செய்தனர். விசாரணையில், அவர் இதுபோல பல பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. பெண்கள் யாரும் பயந்து புகார் தராததால், காமேஷ் தைரியமாக தன் லீலைகளை தொடர்ந்து வந்தது தெரிய வந்தது.

Advertisement