கார் மோதி வாலிபர் உயிரிழப்பு

சேலையூர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கரண்குமார், 23. இவர், தாம்பரம் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றும் சகோதரி ஹரிணியுடன் தங்கி, மேடவாக்கத்தில் உள்ள ஸ்டிக்கர் கடையில் பணிபுரிந்தார்.

நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, 'யமஹா' இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றார். அகரம்தென் பிரதான சாலையில் திருவஞ்சேரி, 'நிறைமதி என்டர்பிரைசஸ்' கடை அருகே சென்றபோது, பக்கவாட்டில் வந்த 'டவேரா' கார் மோதியது.

இதில், துாக்கி வீசப்பட்ட கரண்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து பரிசோதித்ததில், அவர் இறந்தது தெரியவந்தது. போலீசார் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து, பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, கார் ஓட்டுனரான திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மதி, 33, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement