இலவச வீடு கட்டும் திட்டம் விண்ணப்பிக்க அழைப்பு
அன்னூர்: அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில், பயன்பெற பேரூராட்சி அழைப்பு விடுத்துள்ளது.
அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில், ஒரு வீட்டுக்கு ஒதுக்கீட்டுத் தொகை 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயிலிருந்து, 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 300 சதுர அடியில் வீடு கட்ட வேண்டும். சொந்தமாக குறைந்தது ஒன்றரை சென்ட் இடம் உள்ளவர்கள், இந்தத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.
ஏற்கனவே வீடு இருக்கக் கூடாது. பட்டா, ஆதார், வில்லங்க சான்று, இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வங்கிக் கணக்கு நகல் ஆகியவற்றுடன், அன்னூர் பேரூராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
'தகுதியுள்ளோர் தேர்ந்தெடுக்கப்பட்டு, வீடு கட்டுவதற்கான மானியம் வழங்கப்படும்' என, பேரூராட்சி நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement