ஏ.சி., மெக்கானிக் மீது வழக்கு

விழுப்புரம்: வளவனுாரை சேர்ந்தவர் விவேகானந்தன், 37; அதே பகுதி வேல்முருகன், 34; இருவரும் ஏ.சி., மெக்கானிக்.

விவேகானந்தனுக்கு, வேல்முருகன் கூலி பணம் ரூ. 8 ஆயிரம் தர வேண்டும். நேற்று முன்தினம் எல்.ஆர்., பாளையத்தில் இருந்த வேல்முருகனிடம் பணம் கேட்டபோது, விவேகானந்தனை திட்டி தாக்கி மிரட்டியுள்ளார்.

வளவனுார் போலீசார் வேல்முருகன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement