போக்சோ குற்றங்கள் மகளுக்கு தொல்லை; தந்தை கைது
முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், மஞ்சு கோட்டகம் கிராமத்தைச் சேர்ந்த 43 வயது தந்தை, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தன் மகளுக்கு, மே 8ம் தேதி இரவு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுபோல பலமுறை பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து அவரது மனைவி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். முத்துப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், போக்சோ வழக்கு பதிந்து, காமுக தந்தையை கைது செய்தனர்.
17 வயது சிறுமி கர்ப்பம்
மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம், சாத்தனுார் கிராமத்தை சேர்ந்தவர் சபரிநாதன், 28. இவர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார். சிறுமி, நான்கு மாதம் கர்ப்பமாக உள்ளார். இதையறிந்த, நீடாமங்கலம் மகளிர் ஊர்நல அலுவலர் மகேஸ்வரி, போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். மன்னார்குடி மகளிர் போலீசார், சபரிநாதன் மீது போக்சோ வழக்கு பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.
ரகசிய திருமணம் செய்தவருக்கு வலை
நன்னிலம்: திருவாரூர் அருகே, தென்பாதி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ், 22. இவர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து, யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். சிறுமி ஐந்து மாத கர்ப்பமாக உள்ளார். தகவலறிந்த, விரிவாக்க அலுவலர் பழனியம்மாள், போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். நன்னிலம் மகளிர் போலீசார், சந்தோஷ் மீது போக்சோ வழக்கு பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.
மேலும்
-
பசுமை பூங்காவில் இறந்து மிதந்த மீன்
-
மறைமலை அடிகள் பள்ளியில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி
-
சிறப்பு குழந்தைகளை அரசு பாதுகாக்கணும் கவர்னர் ரவி பேச்சு
-
சொந்த வீட்டில் திருடியவர் கைது
-
துர்நாற்றம் வீசும் குடிநீரால் வாந்தி, பேதி வேளச்சேரியில் மக்கள் பாதிப்பு
-
பொது// மனைவியின் கள்ளக்காதலனை சரமாரியாக வெட்டி கொன்ற கணவர்