மனைவியை கொல்ல முயன்ற கணவர் கொலை

எரியோடு:திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே மது போதையில் மனைவியை கொல்ல முயன்ற கணவரை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

எரியோடு அச்சணம்பட்டியை சேர்ந்தவர் தனியார் மில் வேன் டிரைவர் முருகபாண்டி 42. மனைவி முத்துலட்சுமி 35. முருகபாண்டி வருமானத்தில் பெரும் பகுதியை மது குடித்துவிட்டு வீட்டு செலவிற்கு பணம் தராமல் இருந்தார். பணம் கேட்ட முத்துலட்சுமியை தினமும் தாக்கி சண்டையிட்டார். நேற்று முன்தினம் இரவும் மது போதையில் வந்த முருகபாண்டி தகராறு செய்ய கையால் முத்துலட்சுமியை தாக்கி கழுத்தை நெரித்தார். ஆத்திரமடைந்த முத்துலட்சுமி முருகபாண்டி கழுத்தை நெரித்ததில் மயங்கி விழுந்து இறந்தார். முத்துலட்சுமியை எரியோடு போலீசார் கைது செய்தனர்.

Advertisement