நேபாளத்திற்கு 15 மின்சார வாகனம்; பரிசளித்தது இந்தியா

காத்மாண்டு: சுற்றுச்சூழல் தொடர்பான உச்சி மாநாட்டிற்கு, உதவும் வகையில், நேபாளத்திற்கு 15 மின்சார வாகனங்களை இந்தியா பரிசளித்தது.
நேபாள அரசு, காத்மாண்டுவில் வரும் மே-16 முதல் மே-18 வரை மூன்று நாட்கள் சுற்றுச்சூழல் தொடர்பான, 'சாகர்மாத சம்பத்' என்ற உச்சி மாநாடு நடக்கிறது. நேபாளத்தின் மலைப் பகுதிகளின் சுற்றுச்சூழல் பிரச்சினைகள், காலநிலை மாற்றத்தின் தாக்கம் மற்றும் பசுமை ஆற்றல் தீர்வுகள் குறித்து இந்த உச்சி மாநாடு விவாதிக்கும்.
இது குறித்து நேபாள வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உச்சி மாநாடு நிகழ்ச்சியை ஆதரிக்கும் வகையில் 15 மின்சார வாகனங்களை பரிசாக இந்தியா எங்களுக்கு வழங்கி உள்ளது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நேபாளத்திற்கான இந்திய துாதர் நவீன் ஸ்ரீவஸ்தவா, வெளியுறவு அமைச்சர் அர்ஷூ ராணா டியூபாவிடம் 15 மின்சார வாகனங்களை வழங்கினார்.
இந்தியா வழங்கிய மின்சார வாகனங்கள் மூலம் கார்பன் உமிழ்வைக் குறைக்க வழி வகை செய்ய உதவியாக இருக்கும். மேலும் காத்மாண்டு மற்றும் பிற மலைப்பகுதிகளில் பயன்படுத்தப்படும், இதன் மூலம் காற்று மாசு குறையும். இந்தியாவின் இந்த உதவி, இரு நாடுகளுக்கும் இடையேயான நீடித்த பசுமை கூட்டணியை வலுப்படுத்துகிறது.இவ்வாறு வெளியுறவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட மேலும் 2 பேர் கைது
-
பஞ்சாப் எல்லையில் ஹெராயின், ட்ரோன்கள் மீட்பு; பாதுகாப்பு படை நடவடிக்கை
-
இந்தியாவுக்கு ஆதரவு; பலுசிஸ்தான் கிளர்ச்சிப் படை அறிவிப்பு
-
ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதிப்பு
-
எல்லையில் தணிந்தது பதற்றம்; மூடப்பட்ட 32 விமான நிலையங்களை திறக்க மத்திய அரசு உத்தரவு
-
ஆதரவற்ற மாணவர்களை அடையாளம் காட்டுங்கள்