இந்தியாவுக்கு ஆதரவு; பலுசிஸ்தான் கிளர்ச்சிப் படை அறிவிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானை இந்தியா தாக்கினால், நாங்கள் இந்திய ராணுவத்திற்கு உதவியாக செயல்படுவோம் என 'பலுசிஸ்தான் விடுதலை ராணுவம்' என்ற கிளர்ச்சிப் படை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் தென் மேற்கு பிராந்தியமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக்கோரி, நீண்ட காலமாக போராட்டம் நடக்கிறது. பலுசிஸ்தானில், பாக்., ராணுவம் மீது, 'பலுசிஸ்தான் விடுதலை ராணுவம்' என்ற கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
பலுசிஸ்தானின் பல பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதோடு, அரசு அலுவலகங்களில் பாக்., கொடியை அகற்றி விட்டு பலுசிஸ்தான் கொடியை ஏற்றியுள்ளனர். தங்களை தனி நாடாக அங்கீகரிக்கும்படி, இந்தியா மற்றும் ஐ.நா.,வுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில்,
பாகிஸ்தானை இந்தியா தாக்கினால், நாங்கள் இந்திய ராணுவத்திற்கு உதவியாக செயல்படுவோம் என 'பலுசிஸ்தான் விடுதலை ராணுவம்' என்ற கிளர்ச்சிப் படை தெரிவித்துள்ளது. இது குறித்து பலுசிஸ்தான் கிளர்ச்சிப் படை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தானின் பயங்கரவாத அரசை ஒழிப்பதற்கான இறுதி முடிவை இந்தியா எடுக்க வேண்டும். மேற்கு எல்லையில் இருந்து பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பலுசிஸ்தான் கிளர்ச்சிப் படை தயாராக இருக்கிறது என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்.
இந்தியா பாகிஸ்தானைத் தாக்கினால், இந்தியாவின் ராணுவத்திற்கு உதவியாக செயல்படுவோம். இவ்வாறு தெரிவித்துள்ளது.













மேலும்
-
ஆபரேஷன் சிந்துார் :பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு உரை நிகழ்த்துகிறார்
-
தங்கம் வாங்க தங்கமான நேரம்: இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2360 சரிவு
-
என் சந்தோஷத்தின் அடையாளங்கள்..
-
பொய் பிரசாரம் செய்யும் பாகிஸ்தான்; அது உலகிற்கே தெரியும்; காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா குற்றச்சாட்டு
-
சிறப்பு அரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு
-
பாகிஸ்தான் ஏவிய துருக்கி நாட்டு ட்ரோன்கள்; அடித்து நொறுக்கியது இந்திய ராணுவம்; தளபதி பெருமிதம்