பஞ்சாப் எல்லையில் ஹெராயின், ட்ரோன்கள் மீட்பு; பாதுகாப்பு படை நடவடிக்கை

பஞ்சாப்: பஞ்சாப் எல்லையில் ஹெராயின், ட்ரோன்களை எல்லைப் பாதுகாப்பு படையினர் மீட்டனர். எல்லை தாண்டிய கடத்தல் சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு இரவு நேரத்தில் ட்ரோன்கள் வாயிலாக ஆயுதங்கள், போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டு வீசப்படுகின்றன. எல்லையில் ட்ரோன் எதிர்ப்பு கருவிகளை பஞ்சாப் அரசு நிறுவி உள்ளது. இந்த கருவிகள் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் போதைப்பொருட்கள் உள்ளிட்டவற்றை கடத்தி வரும் ட்ரோன்களை துல்லியமாக, சுட்டு வீழ்த்தி தாக்குதல் திறன் கொண்டது.
இந்நிலையில், உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், பஞ்சாப் எல்லையில் ஒரு வயலில் இருந்து 559 கிராம் ஹெராயின் மீட்கப்பட்டு உள்ளது. குர்தாஸ்பூரில் உள்ள ஒரு கிராமத்தில் 3 ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. எல்லை தாண்டிய கடத்தலைத் தடுப்பதிற்கு முற்றுப்புள்ளி வைக்க எல்லை பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும்
-
என் சந்தோஷத்தின் அடையாளங்கள்..
-
பொய் பிரசாரம் செய்யும் பாகிஸ்தான்; அது உலகிற்கே தெரியும்; காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா குற்றச்சாட்டு
-
சிறப்பு அரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு
-
பாகிஸ்தான் ஏவிய துருக்கி நாட்டு ட்ரோன்கள்; அடித்து நொறுக்கியது இந்திய ராணுவம்; தளபதி பெருமிதம்
-
காந்தாரா பட நடிகர் திடீர் மரணம்; திருமண நிகழ்வில் சோகம்
-
தமிழகத்தில் மே 14,15ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்