உலக வில்வித்தை: தீபிகா 'வெண்கலம்'

ஷாங்காய்: உலக கோப்பை வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரி, பார்த் சுஷாந்த் சலுங்கே வெண்கலம் வென்றனர்.
சீனாவின் ஷாங்காய் நகரில், உலக கோப்பை வில்வித்தை 'ஸ்டேஜ்-2' நடந்தது. ஆண்கள் தனிநபர் 'ரிகர்வ்' பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பார்த் சுஷாந்த் சலுங்கே, தென் கொரியாவின் கிம் வூஜின் மோதினர். இதில் ஏமாற்றிய பார்த் சுஷாந்த் 4-6 என தோல்வியடைந்தார். அடுத்து நடந்த 3-4வது இடத்துக்கான போட்டியில் பார்த் சுஷாந்த், பிரான்சின் பாப்டிஸ்ட் அடிஸ் மோதினர். இதில் அசத்திய பார்த் சுஷாந்த் 6-4 (30-28, 28-28, 25-25, 27-30, 29-28) என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.


பெண்கள் தனிநபர் 'ரிகர்வ்' பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் தீபிகா குமாரி, தென் கொரியாவின் லிம் சிஹியோன் மோதினர். இதில் ஏமாற்றிய தீபிகா 1-7 என தோல்வியடைந்தார். அடுத்து நடந்த 3-4வது இடத்துக்கான போட்டியில் எழுச்சி கண்ட தீபிகா 7-2 (27-27, 28-27, 27-30, 30-29, 29-28) என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலம் வென்றார்.

இத்தொடரில் இந்தியாவுக்கு 2 தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலம் என, மொத்தம் 7 பதக்கம் கிடைத்தது.

Advertisement