பாகிஸ்தானின் பொய் அம்பலம்: காஷ்மீரில் மக்கள் வசிப்பிடத்தில் வீசிய குண்டுகள் கண்டெடுப்பு

ரஜோரி; காஷ்மீரில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக இந்திய ராணுவம் கூறி உள்ளது.



பஹல்காம் சம்பவத்தின் நீட்சியாக பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத முகாம்களை இந்திய முப்படைகள் அழித்தன. ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையில் பயங்ககரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். ஏராளமான ஆயுதங்களும் அழிக்கப்பட்டன.


இந்திய தாக்குதலால் நிலைகுலைந்த பாகிஸ்தான் பதிலுக்கு தாக்க, அவை அனைத்தும் முறியடிக்கப்பட்டன. எல்லைகளில் மட்டுமே தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறி வந்த நிலையில், அங்குள்ள கிராமங்களில் பாக். தரப்பில் இருந்து பறந்து வந்த குண்டுகள் வெடிக்காமல் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.


ஜம்மு காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தில் இதுபோன்று வெடிக்காத ஏராளமான குண்டுகளை பொதுமக்கள் கண்டறிந்துள்ளனர். இதையறிந்த ராணுவத்தினர் அந்த குண்டுகளை பாதுகாப்பாக கைப்பற்றி உள்ளனர்.


மக்கள் வசிக்கும் பகுதிகளை குண்டுகளை வீசவில்லை என்று பாகிஸ்தான் கூறியது பொய் என்பது நிரூபணமாகி விட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement