ஆசிய செஸ்: கார்த்திகேயன் 4வது இடம்

அல் ஐன்: ஆசிய செஸ் தொடரின் 'பிளிட்ஸ்' பிரிவில் இந்தியாவின் முரளி கார்த்திகேயன் 4வது இடம் பிடித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) ஆசிய தனிநபர் 'பிளிட்ஸ்' செஸ் சாம்பியன்ஷிப் நடந்தது. இதன் 9வது சுற்றில் இந்தியாவின் இனியன், சேதுராமன் மோதினர். இப்போட்டி 21வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. இந்தியாவின் முரளி கார்த்திகேயன், ரஷ்யாவின் இவான் ஜெம்லியான்ஸ்கியா மோதிய மற்றொரு போட்டி 'டிரா' ஆனது.
இந்தியாவின் நீலேஷ் சஹா, சகவீரர் சுப்ரமணியம் பாரத்தை தோற்கடித்தார். இந்தியாவின் பாஸ்கரன் அதிபன், உஸ்பெகிஸ்தானின் ஓமோனோவை வென்றார்.
ஒன்பது சுற்றுகளின் முடிவில் ரஷ்யாவின் இவான் ஜெம்லியான்ஸ்கியா 8.0 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். இந்தியாவின் முரளி கார்த்திகேயன், நீலேஷ் சஹா தலா 7.0 புள்ளிகளுடன் முறையே 4, 5வது இடத்தை கைப்பற்றினர். மற்றொரு இந்திய வீரர் இனியனுக்கு (6.0 புள்ளி) 17வது இடம் கிடைத்தது.
பெண்கள் தனிநபர் 'பிளிட்ஸ்' பிரிவில் இந்தியாவின் பத்மினி ராத், 7.0 புள்ளிகளுடன் 4வது இடத்தை தட்டிச் சென்றார். கஜகஸ்தானின் அலுவா நுார்மன் 7.5 புள்ளிகளுடன் முதலிடத்தை கைப்பற்றினார்.
மேலும்
-
சென்னையில் பிரபல துணிக்கடையில் திடீர் தீ; அலறி ஓடிய ஊழியர்கள், பொதுமக்கள்
-
பாகிஸ்தானின் பொய் அம்பலம்: காஷ்மீரில் மக்கள் வசிப்பிடத்தில் வீசிய குண்டுகள் கண்டெடுப்பு
-
ராணுவ வீரர்களுக்கு சொத்துவரி விலக்கு: ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் அறிவிப்பு
-
ஆபரேஷன் சிந்துார் :பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு உரை நிகழ்த்துகிறார்
-
தங்கம் வாங்க தங்கமான நேரம்: இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2360 சரிவு
-
என் சந்தோஷத்தின் அடையாளங்கள்..