அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த கோரிக்கை

மேட்டுப்பாளையம்; சிறுமுகை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, தரம் உயர்த்த வேண்டும் என, வியாபாரிகள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுமுகையில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில், வணிகர் தின குடும்ப விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் இனாயத்துல்லா தலைமை வகித்தார். செயலாளர் தாமஸ் அருள்ராஜ் வரவேற்றார். சிறுமுகை அனைத்து கைத்தறி பட்டு சேலை உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்கத் தலைவர் நாகராஜன், வியாபாரிகள் சங்க பொருளாளர் ராமசாமி, துணைத்தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் வியாபாரிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.

கூட்டத்தில், சிறுமுகைக்கு விளாமரத்துாரிலிருந்து குடிநீர் திட்டம் அமைக்க வேண்டும். சிறுமுகை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த வேண்டும். சிறுமுகை நகரில், 24 மணி நேரமும் மும்முனை மின்சார இணைப்பு வசதி செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில துணை பொது செயலாளர் ஹபிபுல்லா உள்பட பலர் பேசினர். கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.

Advertisement