மின் பெட்டிகள் சீரமைப்பு

கொளத்துார்:மாதவரம் மண்டலம், 33வது வார்டுக்கு உட்பட்ட லட்சுமிபுரம், பாரதியார் தெருவில் மூன்று இடங்களில் மின்பகிர்மானப் பெட்டிகள் மேடையோடு சரிந்து விழுந்து, அபாயகரமான வகையில் கிடந்தன.

இங்கு அரசு பள்ளி, கோவில் உள்ளிட்டவை உள்ளன. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இத்தெருவில், சரிந்து கிடக்கும் மின்பகிர்மானப் பெட்டியை சீரமைப்பதில், மின் வாரியம் அலட்சியமாக காட்டி வந்தனர். இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக, சில தினங்களுக்கு முன் சரிந்த கிடந்த மின்பகிர்மானப் பெட்டிகளை வாரியத்தினர் சீரமைத்தனர். பகுதிவாசிகள் கூறுகையில், 'பல மாதங்களாக ஆபத்தான நிலையில் இருந்த மின்பெட்டிகளை, தற்போது சீர் செய்துள்ளனர். இதற்காக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறோம்' என்றனர்.

Advertisement