திருவொற்றியூரில் 200 பேர் ரத்ததானம்

திருவொற்றியூர்:காஞ்சிபுரம் மண்டலம் அ.தி.மு.க., தொழில்நுட்ப பிரிவு சார்பில், முன்னாள் முதல்வர் பழனிசாமியின் 71வது பிறந்த நாளையொட்டி, மெகா ரத்த தான முகாம், நேற்று காலை திருவொற்றியூர், தேரடியில் நடந்தது.

அ.தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக் ஏற்பாட்டில் நடந்த இந்த முகாமை, மாவட்ட செயலர் மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில், கவுன்சிலர் ராஜேஷ் சேகர், முன்னாள் கவுன்சிலர் ஜோசப் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினர் பங்கேற்று, ரத்த தானம் வழங்கினர். ரத்த தானம் வழங்கியவர்களுக்கு, பழங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

Advertisement