ஆட்சீஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில், இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருமண கோலத்தில், அகத்திய முனிவருக்கு காட்சி தரும் நிகழ்வு, நேற்று விமரிசையாக நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கத்தில் உள்ள புகழ்பெற்ற தொண்டைநாடு சிவ தலங்களில் ஒன்று, இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவில்.
இக்கோவிலில், சித்திரை பிரம்மோத்சவ விழா கொடியேற்றம் கடந்த 1ல் துவங்கியது. 3ல் அதிகார நந்தி சேவை, திருமுலைப்பால் உற்சவம், நாயன்மார்கள் உற்சவம் நடந்தது. 7 ல், திருத்தேர் உத்சவம் நடந்தது. 9 ல், பிட்சாடனார் உற்சவம் நடந்தது.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அரப்பெடு பகுதியில், திருமண கோலத்தில் உள்ள இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரரை, பெரும்பேர் கண்டிகை மலை மீது உள்ள சூரசம்கார முருகப் பெருமான் மூன்று முறை வலம் வந்து, தாந்தோன்றீஸ்வரர் கோவிலில் உள்ள அகத்திய முனிவருக்கு காட்சிதரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மேலும்
-
ராணுவ பட்ஜெட் 12 ஆண்டில் 2.6 மடங்கு உயர்வு!
-
அணு ஆயுதத்தை வைத்து இந்தியாவை மிரட்ட முடியாது: வெளியுறவு செயலர்
-
நீங்கள் தான் வெட்கி தலைகுனிய வேண்டும்: முதல்வருக்கு இ.பி.எஸ்., பதில்
-
கூடுதல் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகள்: இந்தியா நடவடிக்கை
-
ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது: சிறப்பு புலனாய்வுக் குழு அதிரடி நடவடிக்கை
-
நமது ட்ரோன், ஏவுகணைகளால் தூக்கம் தொலைத்த பாக்.,: பிரதமர் மோடி