தமிழகத்தில் வாட்டி வதைக்கும் அக்னி நட்சத்திரம்: 14 இடங்களில் இன்று சதமடித்தது வெயில்!

சென்னை: தமிழகத்தில் இன்று (மே 12) 14 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது.
கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அக்னி நட்சத்திரம் துவங்கி நடந்து வருகிறது. வரும் மே 28ம் தேதி நிறைவடைகிறது.
நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று, வேலுார், சென்னை உள்ளிட்ட நகரங்களில் வெயில் 100 டிகிரி பாரான்ஹீட்டை தாண்டியுள்ளது. அதிக வெப்பம் பதிவான இடங்கள் விவரம் வருமாறு:
* மதுரை விமானநிலையம் - 105.8 டிகிரி பாரன்ஹீட்
* கரூர் பரமத்தி - 104.9 டிகிரி பாரன்ஹீட்
* மதுரை நகரம் - 104.72 டிகிரி பாரன்ஹீட்
* ஈரோடு - 104.72 டிகிரி பாரன்ஹீட்
* திருச்சி - 103.82 டிகிரி பாரன்ஹீட்
* பாளையங்கோட்டை - 103.28 டிகிரி பாரன்ஹீட்
* திருத்தணி - 103.1 டிகிரி பாரன்ஹீட்
* சென்னை மீனம்பாக்கம் 102.92 டிகிரி பாரன்ஹீட்
* சென்னை நுங்கம்பாக்கம் 102.2 டிகிரி பாரன்ஹீட்
* கடலூர் - 102.2 டிகிரி பாரன்ஹீட்
* பரங்கிப்பேட்டை - 101.84 டிகிரி பாரன்ஹீட்
* வேலூர்-101.48 டிகிரி பாரன்ஹீட்
* நாகப்பட்டினம் - 101.3 டிகிரி பாரன்ஹீட்
* சேலம் - 100.94 டிகிரி பாரன்ஹீட்


மேலும்
-
மாஜி முதல்வர் பிறந்தநாள் விழா நகர அ.தி.மு.க., கொண்டாட்டம்
-
கும்பகோணம் குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் ரூ.5 லட்சம் அபராதம் கலெக்டருக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
-
புலிகள் காப்பகத்தில் 2,000 ஏக்கர் வனம் அழிப்பு; உடுமலை விவசாயிகள் 'பகீர்' குற்றச்சாட்டு
-
நம் ராணுவ கட்டமைப்புகளை பாகிஸ்தான் நெருங்க முடியாது! சீன ஏவுகணையை சுட்டு வீழ்த்தினோம்; முப்படை அதிகாரிகள் விரிவான விளக்கம்
-
பாக்.,கிற்கு ஆயுதங்களா: சீனா விளக்கம்
-
நலவாரிய ஆபீஸ் திறப்பு