நலவாரிய ஆபீஸ் திறப்பு

எலச்சிபாளையம் :எலச்சிபாளையத்தில், நேற்று சி.ஐ.டி.யூ., நாமக்கல் மாவட்ட மோட்டார் இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கம் சார்பில், சி.ஐ.டி.யூ., தலைவர்களில் ஒருவரான சிந்தன் நினைவாக, தமிழக அரசின் கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் தங்கவேல் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் அசோகன் கணினியில் முதல் பதிவை துவக்கி வைத்தார்.
மாவட்ட செயலாளர் வேலுசாமி நலவாரிய அரசு திட்டங்கள் சம்பந்தமாக விளக்க உரையாற்றினார். தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர்
கலந்துகொண்டனர்.

Advertisement