ஆசிய செஸ்: இனியன் ஏமாற்றம்

அல் ஐன்: ஆசிய செஸ் 5வது சுற்றில் இந்தியாவின் இனியன் தோல்வியடைந்தார்.


ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), ஆசிய 'கான்டினென்டல்' செஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் 5வது சுற்றில் இந்தியாவின் இனியன், ஈரானின் பார்தியா தனேஷ்வர் மோதினர். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய இனியன், 35வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் முரளி கார்த்திகேயன், ரஷ்யாவின் அலெக்ஸி கிரெப்னேவ் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய கார்த்திகேயன், 49வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
இந்தியாவின் நிஹால் சரின், சூர்ய சேகர் கங்குலி தோல்வியடைந்தனர். மற்ற இந்திய வீரர்களான அபிஜீத் குப்தா, சேதுராமன், தங்களது போட்டியை 'டிரா' செய்தனர்.

ஐந்து சுற்றுகளின் முடிவில் முரளி கார்த்திகேயன், தனேஷ்வர் (ஈரான்) தலா 4.5 புள்ளிகளுடன் முதலிரண்டு இடங்களில் உள்ளனர்.
பெண்கள் பிரிவு 5வது சுற்றில் இந்தியாவின் வந்திகா அகர்வால், நந்திதா, ஸ்ரீஜா வெற்றி பெற்றனர். பத்மினி ராத் 'டிரா' செய்தார்.

Advertisement