காவிரி குடிநீர் கேட்டு போராட்டம்

குளித்தலை :குளித்தலை அடுத்த, தோகைமலை பஞ்.. வெள்ளப்பட்டி, களத்து வீடு, சேர்வைக்காரன் பண்ணை பகுதி மக்கள் ஆழ்துளை குழாய் மூலம் குடிநீர் குடித்து வந்தனர். இதில் அதிகளவு உப்பு நீராக வருவதால், சுத்தமான காவிரி குடிநீர் வழங்க கோரி, பலமுறை பஞ்., மற்றும் யூனியன் அதிகாரிகளிடம் மனு அளித்தும் கண்டுகொள்ளவில்லை.


இதையடுத்து நேற்று, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில், காவிரி குடிநீர் வழங்க கோரி காலை 11:00 மணியளவில் யூனியன் அலுவலகம் முன் காலி குடங்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யூனியன் கமிஷனர் ராஜேந்திரன், அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.
அப்போது, மாவட்ட அதிகாரிகளிடம் பேசி உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்ததன்படி போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement