தேவநாத சுவாமி கோவிலில் சித்திரை தேரோட்டம்

கடலுார் : திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி தேர்த் திருவிழா நடந்தது.
கடலுார் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி தினமும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத தேவநாதசுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், வீதியுலா நடந்தது.
ஒன்பதாம் நாள் உற்சவமான நேற்று அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத தேவநாதசுவாமிக்கு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் நடந்தது. பின், சுவாமி புறப்பாடு செய்து தேரில் எழுந்தருளச் செய்து தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஏற்பாடுகளை ஹிந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பணி அனுபவ சான்றிதழ் வழங்க ரூ 60 ஆயிரம் லஞ்சம்; கல்வி அலுவலர் கைது
-
மேயர் வேட்பாளர் உள்ளிட்ட 4 பேர் சுட்டுக்கொலை:மெக்சிகோவில் பதற்றம்
-
பொள்ளாச்சி வழக்கில் தண்டனை அறிவிப்பு; தலைவர்கள் கருத்து!
-
அந்தமானில் தென்மேற்கு பருவமழை துவக்கம்; தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
-
கேரளாவுக்கு ரூ.9 கோடி உயர்ரக கஞ்சா கடத்தல்; ஏர்போர்ட்டில் சிக்கிய இருவர்!
-
சி.பி.எஸ்.இ. 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலம் 'டாப்'
Advertisement
Advertisement